Harris Jayaraj feat. Hariharan & Srimathumitha - Ottaiyanum Senja Thara Songtexte

Songtexte Ottaiyanum Senja Thara - Hariharan , Harris Jayaraj , Srimathumitha




கவ்விகிச்சு love′u
கவ்விகிச்சு love'u
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா
ஹோய் ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா
ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா
மூக்கு முழி உள்ளவளே
முத்தத்துக்கு நல்லவளே
மாரளவு நான் எடுத்து
முத்து மாலை தரவா
முச்சத்துல உள்ளவனே
மச்சம் உள்ள மன்மதனே
மாரளவு எடுக்கையிலே
ஓரளவு தொடவா
வெள்ளி குடமே
தங்க வடமே
இந்த சீயான் பக்கம் திரும்பு
சந்து கெடைச்சா
பந்து அடிப்ப
இது கோயம்பத்தூர் குறும்பு
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா
ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா
சுத்த தங்கம் பத்த வெச்சு நட்சத்திர கல்லு வெச்சு
நெத்தி சுட்டி பண்ணி தாரேன்
என்ன சுத்தி சுத்தி வாரியா
நெத்தி சுட்டி தேவையில்ல
நீல கல்லும் தேவையில்ல
நெத்தியில குங்குமத்த
நீ வச்சிவிட வாரியா
உன் கத்தி மூக்கோட
முத்து மூக்குத்தி
குத்தி விட போறேன் வாரியா
உன் முத்து மூக்குத்தி ஒப்புகாகாது
மூக்கில் மூக்குரச வாரியா
தங்கதோடு நான் தாரேன்
அங்கத்தோடு நீ வாரியா
தோடு போடும் காதோடு மூர்த்த செய்தி சொல்லையா
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா
ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா
வெள்ளி கட்டி வெட்டி தட்டி சல்லி சல்லி மானு கட்டி
கொலுசுங்க பண்ணி தாரேன்
என் கூட மாட வாரியா
கூட மாட வாரதுக்கு
கொலுசுகள் தேவை இல்ல
நீ கெண்ட காலு நண்டு போல
உன் சுண்டு விரல் தேயும்மையா
அடி வஞ்சி உன்கையில் கொஞ்சி விளையாட
வளையல் நான் தாரேன் வாரியா
அட வளையல் வேண்டாமே இப்ப வருவேனே
வலது கை கொஞ்சம் தாரியா
தங்க chain′u நான் தாரேன் தம்மா துண்டு நீ தாரியா
மஞ்ச கயிறு நீ தந்தா
என்னை உரிச்சு தாரேன்யா
ஒட்டியாணம் ஒட்டியாணம் ஒட்டியாணம்
அத செஞ்சு தாரேன் செஞ்சு தாரேன் வரியா
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா
மூக்கு முழி உள்ளவளே
முத்தத்துக்கு நல்லவளே
மாரளவு நான் எடுத்து
முத்து மாலை தரவா
முச்சத்துல உள்ளவனே
மச்சம் உள்ள மன்மதனே
மாரளவு எடுக்கையிலே
நீ ஓரளவு தொடவா
வெள்ளி குடமே
தங்க வடமே இந்த சீயான்
பக்கம் திரும்பு
சந்து கெடைச்சா
பந்து அடிப்ப
இங்கு வேணாம் வேணாம் குறும்பு



Autor(en): Vairamuthu, Harris Jayaraj


Harris Jayaraj feat. Hariharan & Srimathumitha - Arul (Original Motion Picture Soundtrack)
Album Arul (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
01-05-2004



Attention! Feel free to leave feedback.