Songtexte Amaidhiyana Nadhiyinile - Original - P. Susheela , T. M. Soundararajan
Movie: Andavan Kattalai
Singers P. Susheela, T. M. S
M. தென்னை இளம்
கீற்றினிலே ஏ.ஏ.ஏ.
தென்னை இளம் கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளம் கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
M: ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும்
(Female Overlap F: ஓ... ஓ... ஓ...) ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
F: நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலே
தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் என்னும் தென்றலிலே
தொட்டில் கட்டும் மென்மையிது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
F: அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
Both: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

Attention! Feel free to leave feedback.