S. Janaki, Dhanush & Anirudh Ravichander - Amma Amma (The Loss of Raghuvaran) Songtexte

Songtexte Amma Amma (The Loss of Raghuvaran) - S. Janaki , Anirudh Ravichander , Dhanush




அம்மா அம்மா
நீ எங்க அம்மா?
உன்ன விட்ட
எனக்காரு அம்மா?
தேடி பார்த்தானே
காணோம் உன்ன
கண்ணாமூச்சி ஏன்?
வா நீ வெள்ளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்னை தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள்
திறந்தாலே போதும்
அம்மா அம்மா
நீ எங்க அம்மா?
உன்ன விட்ட
எனக்காரு அம்மா?
நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல்
உனக்கென்ன கோவம்?
கண்ணான கண்ணே
ஏன் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி
நீ ஓத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்?
எல்லாம் என்றோ
நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கும் துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே
அம்மா அம்மா
நீ எங்க அம்மா?
உன்ன விட்ட
எனக்காரு அம்மா?
நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பெயர் சொல்லும் பிள்ளை
தூரம் பிரிவில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும்
உன் வாழ்வில் துணை சேரும்
வேண்டும் நான் உன் பின்னே
அம்மா அம்மா
நீ எங்க அம்மா?
உன்ன விட்ட
எனக்காரு அம்மா?
எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் ஏன் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்க்கும்



Autor(en): Dhanush


S. Janaki, Dhanush & Anirudh Ravichander - Velai Illa Pattadhaari
Album Velai Illa Pattadhaari
Veröffentlichungsdatum
14-02-2014




Attention! Feel free to leave feedback.