Sree Ram feat. Kalpana - Tirupatchi Aruvallu (From "Tajmahal") Songtexte

Songtexte Tirupatchi Aruvallu (From "Tajmahal") - Sree Ram feat. Kalpana




திருப்பாச்சி அரிவாள... தீட்டிகிட்டு வாடா வாடா... (2)
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா
போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா
(திருப்பாச்சி)
எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்கசியா மூக்கறுத்தாக
எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக
எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க
அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக
அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக
அட களவாணி கோத்திரமே காளமாட்டு...
அட களவாணி கோத்திரமே காளமாட்டு... த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க
(திருப்பாச்சி)
ஹவ ஹவா எலே ஹவா...
உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா
மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா
சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா
எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா
நான் தட்டிவெச்சா புலியடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா
(திருப்பாச்சி)
திருப்பாச்சி அறிவாள... தீட்டிகிட்டு வாடா வாடா... (3)



Autor(en): a. r. rahman



Attention! Feel free to leave feedback.