Sriram Parthasarathy - Vaanthooral Songtexte

Songtexte Vaanthooral - Sriram Parthasarathy




வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே
விதையை புரட்டி போட்டாலும்
விண்ணை பார்த்து தான் முளைக்கும்
பேர் அன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்
பருவம் கடந்து போனாலும்
அருகம்புல்லு சாகாது
ஓர் தூரலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்
வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே
நிரிசனி தனிப மகமப
நிரிசனி தனிப மகமப
எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார் வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை
மேகமற்ற வானத்தின் கீழே
தாகம்முற்ற பறவையை போலே
ஏதுமற்று பறந்த போதும்
நாடும் துணைகள்
ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்
வான்தூரல் என் தோள்கள்
மேலே வாலாட்டும் நாளே
மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லி தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளபேர்க்கே
வாழ்க்கை என்றுமே இனிக்கும்
ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட
இரை கொடுக்கும்
மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்து கூட
இன்பம் இருக்கும்
வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே



Autor(en): R VAIRAMUTHU, YUVAN SHANKAR RAJA, VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.