Unnikrishnana feat. K. S. Chithra - Theanmearkku Paruva Songtexte

Songtexte Theanmearkku Paruva - K. S. Chithra , Unnikrishnana

தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல், இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல், முத்துத்தூறல்
வெங்காட்டு பத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

Unnikrishnana feat. K. S. Chithra - Karuthamma
Album Karuthamma
Veröffentlichungsdatum
03-11-1994

Attention! Feel free to leave feedback.