Lyrics Chinna Nenjile - Anup Rubens , Sumangali
சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை
இன்பமாய்த் துன்பம் செய்குது
துன்பமாய் இன்பம் செய்குது
ஆளிலாமலே பேசத்தோணுது
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றது
இதற்குப் பேர் காதல் என்பதா
சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை
ஓ
ஒற்றைச்சிறகு கொண்டே
சுற்றிப்பார்க்கும் கிளிபோல்
தத்தை நெஞ்சு தத்தளிக்குதே
தூங்கும்போது விழிக்கும்
நான் விழித்தபின்பும் கனவு
வயசு என்னை வம்புசெய்யுதே
மாலைநேரம் வந்தால் என் மனதில் நாணமில்லை
மார்பில் உள்ள ஆடை என் பேச்சைக் கேட்கவில்லை
இதயக்கூடையில் பூக்கள் நிறையுதா
இதற்குப் பேர் காதல் என்பதா
சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை
லாலலாலலா லலாலலாலலா
லலாலலாலலாலலாலலா
மனசில் மையம் தேடி
புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையைக் கடக்குமோ
கடலில் அலைகள் போலே
என் உடலில் அலைகள் தோன்றி
கும்மிகொட்டிக் கொந்தளிக்குமோ
என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதுமில்லை
என்னைக் கொல்வதா இளைய மன்மதா
இதற்குப் பேர் காதல் என்பதா
சின்ன நெஞ்சிலே நூறுகோடி ஆசை
ஆசைபேசவே போதவில்லை பாஷை
Attention! Feel free to leave feedback.