A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam & Swarnalatha - Yenthen Vanin (From "Kaadhal Virus") paroles de chanson

paroles de chanson Yenthen Vanin (From "Kaadhal Virus") - A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam & Swarnalatha



வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
நீயும் வளர் பிறையாக நிலவே
உயிரை தருவேன் காதல் நிலவே நிலவே
எந்தன் வானின்.
வெண்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
வெண்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
மின்னல் கோடி சேர்த்து வைத்து நீ சிரித்த காட்சிகள்
யாவும் இன்று மாயமாக யாரைக் கேட்க சாட்சிகள்
உன்னை எண்ணி வாழ்ந்தக் காலம் கண்கள் ரெண்டும் ஈரமாக
காதல் ஒன்றும் காயமல்ல காலப்போக்கில் ஆறிப் போக
நெஞ்சம் எல்லாம் வாழுதே தழும்புகளாய்
எந்தன் வானின்.
என்னை விட்டுப் போனது அமைதியன்றோ
நீயும் இல்லா நானுமே அகதியன்றோ
நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி
எந்தன் காதல் நீ அறீந்தால் போதும் அந்த ஓர் நொடி
புல்லின் மீது போகும் போதும் கால் சிவந்த மென்மை நீ
கல்லின் மீது நீயும் இங்கே போவதென்ன கண்மணி
இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கெனத் தான்
எந்தன் வானின்.




A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam & Swarnalatha - Take 10: S. P. Balasubrahmanyam
Album Take 10: S. P. Balasubrahmanyam
date de sortie
10-07-2013



Attention! N'hésitez pas à laisser des commentaires.