paroles de chanson Unn Kanavugal (Male Version) - Bobo Shashi
ஏ.லா... வாடா.ஏ.லா... ஏ... ஏ...
வாடா. ஏ... வாடா... ஏ.லா
உன் நினைவுகள் எதுவோ
அதுதான் உன் உலகம்...
உன் கனவுகள் எதுவோ
அதுதான் உன் இதயம்...
உன் தேடலை நீ தேடிக்கொண்டே
நடந்தால்...
என்றாவது உன் கையில் சேரும் முழுதாய்...
உன் பாதையில்
நீ ஓடிக்கொண்டே இருந்தால்...
என்றாவது அது
வெற்றி தரும் பெரிதாய்...
(இசை)
உன் நினைவுகள் எதுவோ
அதுதான் உன் உலகம்...
உன் கனவுகள் எதுவோ
அதுதான் உன் இதயம்...
(இசை)
ஆண்கள் என்றால் சில வேள்வி வரும்...
பெண்கள் என்றால்
பல கேள்வி வரும்...
வெற்றி எல்லாம் பெரும்
போதை தரும்...
தோல்வி எல்லாம்
ஒரு கீதை ஆகும்...
வெல்லும் வரை ஓயாமல் ஓடு
முந்திக்கொண்டு முன்னேறு நீ
எட்டும் வரை தூங்காமல் தேடு
என்றும் வேண்டும் உன்னோடு நீ
(இசை)
ஓ ஓ. ஆஅ வோ . ஆ ஆ .வோ...
ஓ ஓ. ஆஅ வோ . ஆ ஆ .வோ...
நாட்டின் கண்கள் பெண்கள் என்பாய்
கண்கள் என்று தூங்கச் செய்வாய்...
பெண்கள் வீட்டின் தங்கம் என்பாய்
தங்கம் என்று பூட்டி வைப்பாய்...
வெல்லும் வரை ஓயாமல் ஓடு
முந்திக்கொண்டு முன்னேறு நீ...
எட்டும் வரை தூங்காமல் தேடு
என்றும் வேண்டும் உன்னோடு நீ...
Let's Break it...
உன் நினைவுகள் எதுவோ
அதுதான் உன் உலகம்...
உன் கனவுகள் எதுவோ
அதுதான் உன் இதயம்...
ஏ.லா... வாடா.ஏ.லா... ஏ... ஏ... ஏ... லா
வாடா. டேய். ஏ... வாடா... ஏ.லா
Attention! N'hésitez pas à laisser des commentaires.