Yuvan Shankar Raja feat. Premgi Amaren, Vadivelu & Rahul - Aayiram Jannal Veedu paroles de chanson

paroles de chanson Aayiram Jannal Veedu - Vadivelu , Rahul , Yuvanshankar Raja




ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க
ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்
பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு
வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு
சித்தப்பாவின் மீசையப் பாத்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க
காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்
சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
சொக்கம்பட்டி ஊருக்குள்ள
ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும்
சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி
நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும்
தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்
ஈரமுள்ள இதயமிருந்தால்
ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க
கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்
பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு



Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja



Attention! N'hésitez pas à laisser des commentaires.