S. P. Balasubrahmanyam feat. P. Susheela - Thirutheril Varum (Original) paroles de chanson

paroles de chanson Thirutheril Varum (Original) - S. P. Balasubrahmanyam feat. P. Susheela




திருத்தேரில் வரும் சிலையோ
சிலைபூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனிபோல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழிக்கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன்மழை தூவுது
ராகங்களில் மோஹனம்
மேகங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனிபோல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழிக்கணையோ தரும் சுகம் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூரக் கோவிலின் மேளம் இது
சிருங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் சாரம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பாத்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலைபூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ



Writer(s): ILAIYARAAJA, KANNADHASAN, RAAJA ILAIYA


Attention! N'hésitez pas à laisser des commentaires.