S. Janaki - Vaanmathiye Vaanmathiye - From "Aranmanai Kili" текст песни

Текст песни Vaanmathiye Vaanmathiye - From "Aranmanai Kili" - S. Janaki




வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே
வான்மதியே ஓ வான்மதியே
தூது செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்
வான்மதியே.
சரணம் ௧
வைகை வந்து கை அணைக்க
வெள்ளி அலை மெய் அணைக்க
வாடி நின்ற தென் மதுரை நான் தானோ
தென்றலுக்கு ஆசை இல்லை
தேம்பிடுதே வாச முல்லை
அம்மம்மா அன்புத் தொல்லை ஏன் தானோ
வண்ணப்பூவும் என்னைக் கண்டு
வாய் இதழை மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது
அந்தி மாலை வரும் நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம வாடும் விதம் பாராய்
வான்மதியே...
சரணம் ௨
நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து
நித்தம் நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை கூறாயோ
உன்னைப்போல நானும் மெல்ல
தேய்வதிங்கு ஞாயம் அல்ல
வெண்ணிலவே தூது செல்ல வாராயோ
எத்தனையோ சொல்லி வைத்தேன்
எண்ணங்களை அள்ளி விட்டேன்
இன்னும் அந்த மன்னன் மனம் மாறாதது ஏன்
உயிர்க் காதல் துணை வராமல்
கண்ணை இமை சேராமல்
பாவை நிதம் வாடும் விதம் பாராய்
வான்மதியே ...





Внимание! Не стесняйтесь оставлять отзывы.