P. Susheela - Neela Chelai текст песни

Текст песни Neela Chelai - P. Susheela



ஏலே ஏலோ ஏலே லேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஹோய் ஹையா ஏலே ஏலோ ஏலே லேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஹோய் ஹையா ஏலே ஏலோ ஏலே லேலோ
ஹோ... ஓய்... ஆஆ ...ஹோய் ஏலேலோ...
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
நீல சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு...
நீ நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
நீல சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு.
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
யாரை காண துடிக்கிறியோ
கரையில நின்னு
அந்த ஆள் வராமல் திரும்பறியோ சொல்லடி கண்ணு
யாரை காண துடிக்கிறியோ
கரையில நின்னு
ஆள் வராமல் திரும்பறியோ
சொல்லடி கண்ணு
ஓஹோஹோஹோ...
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
வலையை வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன்
உடலை கலக்க வில்லையா
ஏலேலோ லேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
வலையை வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன் உடலை
கலக்க வில்லையா
கலக்கும் போது புதிய இன்பம்
பிறக்கவில்லையா
இன்பம் பிறந்த பின்பும்
உன் துடிப்பு அடங்க வில்லையா
நீல சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
ஓஹோஹோஹோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி
தவிக்குதடி இன்பத்தை அள்ள
ஏலேலோ லேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி தவிக்குதடி
இன்பத்தை அள்ள
உனக்கு வந்த அனுபவத்தை
சொல்லடி மெல்ல
எனக்கும் ஒருவன் வந்து
சேரும் போது அவனிடம் சொல்ல
நீல சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
யாரை காண துடிக்கிறியோ
கரையில நின்னு
அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி கண்ணு
ஓஹோஹோஹோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
ஆ.ஆ.ஆ.ஆ...
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
லேலோ ஓஓ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
லேலோ ஓஓ



Авторы: K V Mahadevan, Kannadhasan


P. Susheela - Thiruvilaiyadal (Original Motion Picture Soundtrack)
Альбом Thiruvilaiyadal (Original Motion Picture Soundtrack)
дата релиза
01-12-1965




Внимание! Не стесняйтесь оставлять отзывы.