A. R. Rahman feat. Sid Sriram, Aaryan Dinesh Kanagaratnam & Aparna Narayanan - Thalli Pogathey Lyrics

Lyrics Thalli Pogathey - A. R. Rahman , Sid Sriram



ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
கண்ணெல்லாம். நீயேதான்.
நிற்கின்றாய்.
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.
இமை மூடிடு என்றேன்.
நகரும் நொடிகள்
கசையடிப் போலே
முதுகின் மேலே
விழுவதினாலே
வரி வரிக் கவிதை.
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள் எனது.!!
கடல் போல பெரிதாக நீ நின்றாய்.
சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன். பார்க்கிறேன்.
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.
ஓ. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே.
கலாபம் போலாடும்
கனவில் வாழ்கின்றனே.
கை நீட்டி உன்னைத்
தீண்டவே பார்த்தேன்.
ஏன் அதில் தோற்றேன்.?
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.?
தாமரை வேகுது.!
தள்ளிப் போகாதே.
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
தள்ளிப் போகாதே.
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
தேகம் தடை இல்லை
என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.
ஆனால் அது பொய் தான்
என நீயும்
அறிவாய் என்கின்றேன்.
அருகினில் வா.
கனவிலே தெரிந்தாய்.
விழித்ததும் ஒளிந்தாய்.
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்.
கண்களில் ஏக்கம்.
காதலின் மயக்கம்.
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.
நொடி நொடியாய் நேரம் குறைய.
என் காதல் ஆயுள் கறைய.
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.
விதியின் சதி விளையாடுதே.
எனை விட்டுப் பிரியாதன்பே.
எனை விட்டுப் பிரியாதன்பே.
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே.



Writer(s): a. r. rahman


A. R. Rahman feat. Sid Sriram, Aaryan Dinesh Kanagaratnam & Aparna Narayanan - Achcham Yenbadhu Madamaiyada (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.