Harini feat. S. P. Balasubrahmanyam - Suthi Suthi Vandhiga Lyrics

Lyrics Suthi Suthi Vandhiga - S. P. Balasubrahmanyam , Harini

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க
அடி காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
என் காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு
மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்
என் உசுர குடிக்கும் உசுர குடிக்கும் உதட்டுக்கு
மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன்
அடி தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக
உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக
இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுக
ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க
நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்
தயிருபோல தயிருபோல ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீங்க
நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக
உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக
தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக
எல்லை தாண்டாதிக என்னை தூண்டாதிக
என் வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக
பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

Writer(s): a. r. rahman

Harini feat. S. P. Balasubrahmanyam - Padayppa (Original Motion Picture Soundtrack)
Album Padayppa (Original Motion Picture Soundtrack)
date of release
15-01-1999

Attention! Feel free to leave feedback.