Karthik feat. Shreya Ghoshal - Neelangarayil (From "Pulivaal") Lyrics

Lyrics Neelangarayil (From "Pulivaal") - Shreya Ghoshal , Karthik



நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பறப்போம் காற்றிலே
உடம்பிலிருந்து உசிர மட்டும்
உருவி உருவி இழுக்காதே
மாச மாசம் டீசல் விலை போல
ஆசா பாசம் ஏத்தாதே
பொடவ துவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பறப்போம் காற்றிலே
பட்டா போட்ட தங்கக் கட்டி
பட்டாம்பூச்சி போட்ட குட்டி
ஒத்து போகும் காதலியெல்லாம்
50 50 பொண்டாட்டி
கன்னிப்பொண்ணு ஓரங்கட்டி
கன்னங்கிள்ளி கண்ணை கட்டி
காதல் பண்ணும் பூனை குட்டி
எட்டி நில்லு நான் கெட்டி
காதல் எறும்பு ஊரும் போது
கல்லும்கூட தேயுமே
தூரம் பார்த்து நின்ற பெண்மை
தோளில் வந்து சாயுமே
நீ தொட தொட உச்சந்தலை கொதிக்குது
விரல் பட பட உள்ளங்காலு குளிருது
நீ சண்டைக்காரி ஆகும்போது பதறுது
என் மண்டைக்குள்ள நட்சத்திரம் சிதறது
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
பொடவ துவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திறந்து வையம் கடந்து
பறப்போம் காற்றிலே
செல்போன் மொழி பேசி பேசி
சின்ன பொண்ண கெடுக்காதே நீ
நூலாம்படை நூலை கட்டி
கோயில் தேரை இழுக்காதே
வெள்ளக்காரன் போகும்போதே
வெட்கம் கூட போயே போச்சே
காலம் இப்போ high tech ஆச்சே
கையை விட்டு போகாதே
பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
Fridge′ல் வைத்த apple போல
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணை போல
நீ வர வர வக்கிலுக்கு படிக்கிற
நீ வாதம் பண்ணி வாதம் பண்ணி ஜெயிக்கிற
நீ முட்டாளுனு நம்பவச்சு நடிக்கிற
உன் முட்ட கண்ணில் ரெட்ட முயல் புடிக்கிற
பொடவ துவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே
உடம்பிலிருந்து உசிர மட்டும்
உருவி உருவி எடுக்காதே
மாச மாசம் டீசல் விலை போல
ஆசா பாசம் ஏத்தாதே
பொடவ துவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்
புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே



Writer(s): Vairamuthu


Karthik feat. Shreya Ghoshal - Karthik - The Singer
Album Karthik - The Singer
date of release
31-10-2019



Attention! Feel free to leave feedback.