Sean Roldan - Poi Varavaa Lyrics

Lyrics Poi Varavaa - Sean Roldan



போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று
நீயிருந்தால் ஆகாயமும்
என் கையோடு சேராதோ காதல் கொண்டு
பறவை ரெண்டும் வேறுதான்
சிறகின் இறகும் வேறுதான்
என்றாலும் பாதை ஒன்று அறிவேன்
என்னாலும் உந்தன் அன்பை மறவேன்
போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று
நீயிருந்தால் ஆகாயமும்
என் கையோடு சேராதோ காதல் கொண்டு
அலங்கோலமாக இருந்தேனே நேற்று
அழகான மாற்றம் நீயும் வந்தாய்
தகராறு நானும் வரலாறு போல
உருமாற நீயே வேகம் தந்தாய்
தவறு புரிந்த எனையுமே
தழுவத்துனிந்த இதயமே
கண்ணீரின் உந்தன் கால் கழுவ
என்னாதோ நெஞ்சம் நீயும் உதவ
போய் வரவா போய் வரவா
விழுந்தாலும் நானே விதையாக வேண்டும்
வருங்காலம் பேச வாழ்வை வெல்வோம்
அவமானம் தோல்வி உரமாக மாற
அடையாளம் மீட்க கோபம் கொள்வோம்
ஏதுவும் உன் வாழ்வில் பாடலே
எதற்கு இன்னும் சோகமே
எழுந்தால் எட்டு திசையும் உறுதி
மனம் முயன்றால் விட்டு விலகும் அவதி
போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று
நீயிருந்தால் ஆகாயமும்
என் கையோடு சேராதோ காதல் கொண்டு
பறவை ரெண்டும் வேறுதான்
சிறகின் இறகும் வேறுதான்
என்றாலும் பாதை ஒன்று அறிவேன்
என்னாலும் உந்தன் அன்பை மறவேன்



Writer(s): Yugabharathi, Justin Prabhakaran


Sean Roldan - Thondan
Album Thondan
date of release
15-07-2019




Attention! Feel free to leave feedback.