Shankar Mahadevan feat. Hamsika Iyer - Bhaaradham Lyrics

Lyrics Bhaaradham - Shankar Mahadevan feat. Hamsika Iyer



தேசக் காதல் பாடடி
அது மனதின் ராகந்தானடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
தேசக் காதல் பாடடி
அது மனதின் ராகந்தானடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
பூக்களை என் பாதை மேலே
தூவினாளே பாரடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
ஹா... ஆஅ... ஆஅ... ஆஅ...
எந்தன் நரம்புகள் கொண்டு செய்த
வீணை ஒன்று வேண்டுமே
வீர பாரத கதைகள் எல்லாம்
எந்தன் நெஞ்சம் பாடுமே
தேசம் எந்தன் வாசம் இல்லை
சுவாசம் என்றே சொல்லடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
பகைவர் காதில் கூறடி
என் எண்ணம் வாளினும் கூறடி
எல்லை தாண்டிக் கால் பதித்தால்
என்னவாகும் பாரடி
எந்தன் வீரம் வைரம் போலே
வானில் மின்னும் மீனடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
பாரதம் எனும் பெயரைச் சொன்னால்
என் மண்ணின் தீப்பொறி நானடி
என்னை நானே மறக்கிறேன்
எந்தன் குருதித் துளிகளை
என் மண்ணில் சிந்தி பிறக்கிறேன்
ஹா... ஆஅ... ஆஅ... ஆ...
போரிலே நான் இறந்த நொடிகள்
இன்பம் என்றே சொல்லடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடி



Writer(s): Loy Mendonsa, Ehsaan Noorani, Madhan Karky Vairamuthu, Shankar Mahadevan


Shankar Mahadevan feat. Hamsika Iyer - Manikarnika - The Queen Of Jhansi
Album Manikarnika - The Queen Of Jhansi
date of release
25-01-2019



Attention! Feel free to leave feedback.