Shobhu Shanker - Maargazhi Poovea Lyrics

Lyrics Maargazhi Poovea - Shobhu Shanker



மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மார்கழி பூவே மார்கழி
பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு வசிப்பேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் சிறுபூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள் இன்பம் (2)
காவிரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
தந்துவிடும் சிறுபூக்கள் கொஞ்சம்
பாட வரும் பெண்ணுக்கு சந்தம்
தந்து விடும் மைனாக்கள் இன்பம் (4)




Shobhu Shanker - May Madham
Album May Madham
date of release
09-09-1994



Attention! Feel free to leave feedback.