Swarnalatha - Poralea Ponnu Thai (Happy) Lyrics

Lyrics Poralea Ponnu Thai (Happy) - Swarnalatha



போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கருத போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
வெள்ளாமை நீ தான்
வெள்ளாடு நான் தான்
வெட்கத்த விட்டு தள்ளமா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாட கட்டிகாக்கும்
பட்டி காட்டு கருத்தம்மா
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கருத போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
படிக்காத புள்ள
மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல
மனசில கள்ளமில்லை
உன் மேல கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே
தோதுயில்லை தோதுயில்லை
வைகைக்கு கடல சேர
யோகமில்லை யோகமில்லை
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்லை
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கருத போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
வெள்ளாமை நீ தான்
வெள்ளாடு நான் தான்
வெட்கத்த விட்டு தள்ளமா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாட கட்டிகாக்கும்
பட்டி காட்டு கருத்தம்மா
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கருத போல வெக்கபட்டு
நீ கண்ட வள்ளி
சப்பாத்தி கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும்
கனியிலும் முள்ளிருக்கும்
அடி போடி கள்ளி
நீ தாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி
கொல்லுரியே கொல்லுரியே
வர வர பொம்பள பொழப்பயே
வம்புல மாட்டுறியே
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில்(போறாளே பொண்ணுத்தாயீ) மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு(கட்டு பட்டு)
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
வெள்ளாமை நீ தான்
வெள்ளாடு நான் தான்
வெட்கத்த விட்டு தள்ளமா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாட கட்டிகாக்கும்
பட்டி காட்டு கருத்தம்மா
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில மனச தொட்டு
தர பாக்கும் கருத போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு




Swarnalatha - Karuthamma
Album Karuthamma
date of release
03-11-1994




Attention! Feel free to leave feedback.