Yuvan Shankar Raja - Paarai Mele (From "Sathriyan") Lyrics

Lyrics Paarai Mele (From "Sathriyan") - Yuvan Shankar Raja



பாறை மேலே தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே
காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே
பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தால் மனது தடுக்காதே
குழந்தை போலே குதிக்கின்றேன்
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட
பாறை மேலே தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே
காற்றில் மோதி உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே
பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தால் மனது தடுக்காதே
குழந்தை போலே குதிக்கின்றேன்
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட ஹேய்
இருதயம் அடிக்கடி
தலையை தூக்கி பார்க்குதே
உன்னை பற்றி குறிப்புகள்
சொல்ல சொல்லி கேட்குதே
கண்ணை கட்டி... கண்ணை கட்டி
கண்ணை கட்டி காட்டில் விட்ட
பொம்மை போல தவிக்கிறேன்
கடவுள் தந்த புதையல் நீயே
உன்னை அடைய வழி தேடி
தவம் பல கிடந்தேன்
பாறை மேலே தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே
காற்றில் மோதி உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே
கால்கள் ரெண்டும் சிறகாக
தேகம் எல்லாம் இறகாக
மேலே பறந்து நான் போக
புது மாயங்கள்
எனக்குள்ளே நிகழ்கிறதே
தாய்மையின் ஸ்பரிசத்தை
உந்தன் பார்வை கொடுக்குதே
நீ இல்லா நிமிடங்கள்
நெருப்பை போல பற்றுதே
நேற்று வரைக்கும்
இருந்த என்னை
தோற்கடித்து ரசிக்கிறேன்
வேற்று கிரகம் போலே
இந்த பூமி பந்தை
ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்




Yuvan Shankar Raja - Yuvan Forever
Album Yuvan Forever
date of release
23-08-2019




Attention! Feel free to leave feedback.