A. R. Rahman - Nenjae Yezhu (From "Maryan") paroles de chanson

paroles de chanson Nenjae Yezhu (From "Maryan") - A. R. Rahman



ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே...
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு ...
காதல்... என்றும்... அழிவதில்லை...
இருவர் வானம் வேர் என்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையின் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு ...
காதல்... என்றும்... அழிவதில்லை...
அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய்
வழி எங்கும் உன் முன் பூ மழை
அன்பாலும் உன் காதல் இது வாழும் சத்தியமே...
தொலையாதே எந்த இருளிலும் மறையாதே...
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு ...
காதல்... என்றும்... அழிவதில்லை...
ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே...
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு ...
காதல்... என்றும்... அழிவதில்லை...



Writer(s): A R RAHMAN, KUTTI REVATHI


A. R. Rahman - Voice of Rahman
Album Voice of Rahman
date de sortie
19-07-2013




Attention! N'hésitez pas à laisser des commentaires.