Hariharan - Kannai Kattaikkollaadhe paroles de chanson

paroles de chanson Kannai Kattaikkollaadhe - Hariharan



வி... டு... த... லை... விடுதலை
வி... டு... த... லை... விடுதலை
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே... பயமில்லையே...
மனதினில் கரையில்லையே... குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
வி... டு... த... லை... விடுதலை
வி... டு... த... லை... விடுதலை
தோழா... தோழா... லாலல்லா
தோழா... தோழா... லாலல்லா
மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
மடியினில் கனமில்லையே... பயமில்லையே...
மனதினில் கரையில்லையே... குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...
வி... டு... த... லை... விடுதலை
வி... டு... த... லை... விடுதலை
தோழா... தோழா... லாலல்லா
தோழா... தோழா... லாலல்லா




Hariharan - Iruvar
Album Iruvar
date de sortie
14-01-1997




Attention! N'hésitez pas à laisser des commentaires.