Ilaiyaraaja - Ayya Veedu Therandhuthan paroles de chanson

paroles de chanson Ayya Veedu Therandhuthan - Ilaiyaraaja



வீட்டுக்கு கதவிருக்கு
கதவுக்கு பூட்டிருக்கு
வானத்த பூட்டி வைப்பதாரடா
அன்புக்கு மனசிருக்கு
ஆசைக்கு அளவிருக்கு
கடலுக்கு அணை இங்கு ஏதடா
யாரிங்கு வந்தாலும்
யாரெங்கு போனாலும்
கடல் நீரு கொறையாது போங்கடா
கரையோரம் உறவாட வாங்கடா
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காது
நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு
ஏழைக்கு நீயும் இங்கே நம்மாளு
சோகம் என்ன உன்னோடு
கொண்டாடு
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஜிங்க் ஜிக் ஜிங்க்
ஜிக் ஜூம் ஜூம்
ஹே புள்ளாண்டா
புள்ளாண்டா காசோட
யாரிங்கு வாராண்டா
சொல்லேண்டா சொல்லேண்டா
எதுக்கு காசெல்லாம் வூட்டுவூட்டு
போறான்டா
இருக்கும் வரைக்கும்
சூட்டு கோட்டு
ஹே அடிப்பான் பாரு
தாட்டு பூட்டு
அட பாட்டன் பூட்டன்
கதைய கேட்டு
ம்ம் போவான் இவனும்
பழைய ரூட்டு
பூமி இது வாடக வூடு
புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு
சத்தியத்த நெஞ்சுல வச்சு
சந்தோசமா சங்கதி போடு
கடலும் அலையும் சேர்ந்துதான்
பாடும் எப்போதும் கொண்டாட்டம் ஹே
அய்யா வூடு
ஹே ஹே ஹே ஹே
அய்யா வூடு
ஹே ஹே ஹே ஹே
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
மண்மேலே மண்மேலே
எல்லார்க்கும் சாப்பாடு யாராலே
தந்தாலே தந்தாலே நம்மோட
சாப்பாடு நீர் மேலே
கடலில் ஆடும்
அலைய பாத்தேன் வெளிச்சம்
கொடுக்கும் நிலவ பாத்தேன்
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்
பதிலே இல்ல மலைச்சு போனேன்
கண்ணுக்கெட்டும்
தூரம் தூரம் மனுஷன தான்
காணோம் காணோம் கலி
முடியும் நேரம் நேரம் புது
மனுஷன் வேணும் வேணும்
மனசும் மனசும் கலந்து தான்
இருந்தா எப்போதும் கொண்டாட்டம்
தான் ஹே
அய்யா வூடு
ஹே தகிட தகிட தகிட தகிட
அய்யா வூடு
ஹே இந்தா இந்தா இந்தா இந்தா
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காது
நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு
சோகம் என்ன உன்னோடு கொண்டாடு
ஹே
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு



Writer(s): Palani Bharathi


Ilaiyaraaja - Thullatha Manamum Thullum & Kadalakku Mariathai




Attention! N'hésitez pas à laisser des commentaires.