Shalmali Kholgade - Aye paroles de chanson

paroles de chanson Aye - Shalmali Kholgade



எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்
ராஜா ராஜா
பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான்
வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான்
விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான்
ராஜா ராஜா
ராஜா ராஜா
அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா
அவன் எனக்கே ராஜா
ஒரு புறம் காதல் இருக்கிறதே
மறு புறம் நட்பும் இருக்கிறதே
மதிலினில் நடக்கும் பூனையின் நிலைமை
இவளுக்கு ஏனோ கொடுத்தானே?
அதில் விழும் பொழுதும்
இதில் விழும் பொழுதும்
வலிகளை பரிசாய் கொடுப்பானே
இவனில்லாமல் நீ என்னாவாய்
இதயம் என்னைக் கேட்கிறதே
நீயில்லாமல் நான் என்னாவேன்
பதிலைச் சொன்னேன் முறைக்கிறதே
ராஜா ராஜா
மனம் வருடும் ராஜா
ராஜா ராஜா
எனைத் திருடும் ராஜா
எனக்கு எனக்கு அவன் ...
பல பல வருடங்கள் அறிந்திருந்தும்
தினம் தினம் புதிதாய் தெரிந்திடுவான்
கவலையில் விழுந்தால் சிரிப்புகள் தெளிப்பான்
சிரித்திடும் போதோ அடி கொடுப்பான்
அணைப்பதை போலே நினைத்திடும் போதே
வெதுவெதுப்பொன்றை அவன் தருவான்
இரவின் மடியில் தனிமை நொடியில்
இவளின் விரலாய் மாறுகிறான்
உடைகள் உறக்கம் மனதைக் குலைத்து
உயிரில் உயிராய் ஊறுகிறான்
ராஜா ராஜா
என் உடைமை ராஜா
ராஜா ராஜா
என் முழுமை ராஜா
எனக்கு எனக்கு அவன் ...



Writer(s): shalmali kholgade


Shalmali Kholgade - Aye
Album Aye
date de sortie
14-02-2017

1 Aye




Attention! N'hésitez pas à laisser des commentaires.