Vidyasagar feat. Hariharan, Harini & K. S. Chitra - Thom Thom paroles de chanson

paroles de chanson Thom Thom - Vidyasagar feat. Hariharan, Harini & K. S. Chitra



தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்
கொத்திக்கொத்தி பேசும் கண்ணை
திக்கித்திக்கி வாசித்தோம்
சுற்றிச்சுற்றி வீசும் காற்றை
நிற்கச்சொல்லி சுவாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும்
இதழை முத்தம் செய்து தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி
சேரச்சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி
சேரச்சொல்லி யாசித்தோம்
ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே
கோடிச்சொல்லை வாதித்தோம்
மெல்லப்பேசி மெல்லத்தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் திருடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே
நம்மை தின்னச்சொல்லி தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்



Writer(s): Vidya Sagar, Bose Gigineni


Vidyasagar feat. Hariharan, Harini & K. S. Chitra - Alli Thantha Vaanam (Original Background Score)



Attention! N'hésitez pas à laisser des commentaires.