Deva - Thanjavooru Mannu Eduthu Songtexte

Songtexte Thanjavooru Mannu Eduthu - Deva feat. Krishna Raj




தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து-சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா
பதில் சொல்லம்மா
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி-சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து-சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
போடு தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து-சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா
பதில் சொல்லம்மா
தந்தானே-தந்தானே-தந்தானக் குயிலே
சாமி தந்தானே-தந்தானே என்னோட மயிலே
போடு



Autor(en): Deva Ind, V Senthil Nathan



Attention! Feel free to leave feedback.