Haricharan feat. Vandana Srinivasan - Nee Illai Endraal Songtexte

Songtexte Nee Illai Endraal - Vandana Srinivasan , Haricharan




நீ இல்லை என்றால்
எனக்கென யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே இல்லையே
நீ தான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து
போவோமே
உனக்கென உருகினேன்
உயிரில் கரைகிறேன்
அனலென எறிகிறேன்
அலையாய் உடைகிறேன்
உனக்கென வருகிறேன்
உடலை இணைகிறேன்
எப்படி நீங்குவேன்
என்னிடம் வா
கனவிலே வருகிறாய்
கண்டதும் மறைகிறாய்
கண்களில் வாழ்கிறாய்
கண்ணீரில் மிதக்கிறேன்
எதற்கென்னை மறுக்கிறாய்
இதயம் வலிக்குது
எப்படி தாங்குவேன்
என்னிடம் வா
கலங்கரை வெளிச்சமும்
அணைந்து போனாலே
கடலினில் சுழலினில்
எங்கு போவேன் நான்
இணைந்த கை நழுவினால்
என்ன ஆவேன் நான்
உனக்கென வாழுகின்றேனே
உயிரினை தாங்குகின்றேனே
உனக்கிந்த கோபம் ஏனோ
காயம் ஏனோ
என்னிடம் வா அன்பே
என்னிடம் வா அன்பே
உனக்கென உருகினேன்
என்னிடம் வா அன்பே
உயிரில் கரைகிறேன்
என்னிடம் வா அன்பே
அனலென எறிகிறேன்
என்னிடம் வா அன்பே
அலையாய் உடைகிறேன்
என்னிடம் வா
நீ இல்லை என்றால்
எனக்கென யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே இல்லையே
நீ தான் நான்
உடைந்து போகாதே
காதலால்
கடந்து போவோமே
உனக்கென உருகினேன்
ஆஹா
உயிரில் கரைகிறேன்
ஆஹா
அனலென எறிகிறேன்
ஆஹா
அலையாய் உடைகிறேன்
ஆஹா



Autor(en): Sundaramurthy Ks, Kutti Revathy




Attention! Feel free to leave feedback.