Hariharan - Oru Devathai Vanthu Vittaal (Male) Songtexte

Songtexte Oru Devathai Vanthu Vittaal (Male) - Hariharan




ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன்
உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன்
என் நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
ரோஜா செடிகள் நட்டு உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும் ரோஜா வெளியில் வரும் நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்
அன்பே உன் பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்
கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்
என் நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க



Autor(en): A R Rahman, R.ravishankar R.ravishankar


Attention! Feel free to leave feedback.