Harini - Hey Keechu Kiliye (F) Songtexte

Songtexte Hey Keechu Kiliye (F) - Deva , Harini , Vairamuthu

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
அதன் உயிர்சதை அசைவது என்றும் அந்த நாதத்தில்
உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே
எந்திர வாழ்கையின் இடையே
நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே எல்லாம் இசையே
காதல் வந்தால் அட அங்கும் இசை தான்
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான்
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
யுத்த களத்தில் தூக்கம் கலைத்து
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்
இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம் இசையாவோம்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
இன்னிசை நின்று போனால்
என் இதயம் நின்று போகும் இசையே உயிரே
எந்தன் தாய்மொழி இசையே
என் இமைகள் துடிப்பதும் இசையே எங்கும் இசையே
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு
இசையோடு வந்தேன் இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன் இசையாவேன்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

Autor(en): Vairamuthu, Deva

Attention! Feel free to leave feedback.