Ilaiyaraaja feat. Kailash Kher - Thaaimadiyil Songtexte

Songtexte Thaaimadiyil - Ilaiyaraaja , Kailash Kher




தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
சோகம் தாங்கி
பாரம் இறக்க யாரும் இல்லையே
தாகம் தீர்க்க
சுணையாய் இங்கு கருணை இல்லையே
கோபம் வாழ்வில் நிழலாய்
ஓடி ஆடி அலைய
பாசம் நெஞ்சில் கனலாய்
ஓங்கி ஏங்கி எரிய
காற்றே என்
காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
காயம் செய்த மனிதன்
இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்
காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை
தாயே என்
தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே




Ilaiyaraaja feat. Kailash Kher - Psycho (Tamil) [Original Motion Picture Soundtrack] - Single



Attention! Feel free to leave feedback.
//}