Ka Ka Balachander feat. Gana Bala - Sandhanatha Songtexte

Songtexte Sandhanatha - Ka Ka Balachander feat. Gana Bala




சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
தம்பி அண்ணண்
பெத்த பொண்ணு
பெரிய மனுஷி ஆயிட்டா
நேத்து இந்த ரோஜா பூவு
வீட்டுக்குள்ள பூத்துட்டா
தாய்மாமன் எல்லாரும் ஒன்னாதானே ஆயிட்டோம்
டப்பாங் குத்து ஆடிக்கினு ஊர்வளமா கிளம்பிட்டோம்
சொந்த பந்தம் எல்லாத்துக்கும்
செய்தி சொல்லி அனுப்புடா
சந்து பொந்து எல்லா இடமும்
போஸ்டர் அடிச்சு ஒட்டுடா
சந்தனத்தை... ஐய்யய்யோ... சந்தனத்தை...
சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... ஹேய்
பாவாடை சட்ட போட்ட
பட்டாம்பூச்சி உனக்கு
தாய்மாமன் கொண்டு வந்த
தங்க செயினு பரிசு
ஆளாகி விட்டாலே அக்கா பொண்ணு தான்டா
அத கேட்டு சந்தோஷம் அடஞ்சிட்டேன் நான்டா
பழைய துணி எல்லாம் பரணியில் போடுடா
பட்டு பொடவ வாங்கி கட்டுனாக்க ஜோருடா
பவளம் முத்து வைரம் தோத்து போவும் பாருடா
இவளை போல அழகி ஊருக்குள்ள யாருடா
வாழை போல வளந்துட்டா
சின்ன வயசுல நான்
பாத்ததை போல் இல்லடா
ஆளே மாறிவிட்டா
பழசை எல்லாம் மறந்துட்டா
பக்குவமா ஆயிட்டா
தென்னை ஓல குடிசையில
எங்க வீட்டு திண்ணையில
புதுசாதான் பொறந்துட்டா டா
சந்தனத்தை... ஐய்ய... சந்தனத்தை...
சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
பொட்டலமிட்டாய் பொட்டலமிட்டாய் உடாத...
கோவிந்தம்மா உடாத...
உடாத... மஜாபா... அவளை உடாத...
தட்டிவிடு... தட்டிவிடு...
காலுல மெட்டி கட்டி
பாடுதம்மா கொலுசு
காதுல ஊஞ்சல் கட்டி
ஆடுதடா கம்மலு
பாத்தாலே மின்னுதம்மா
அக்கா பொண்ணு அழகு
பயந்துக்கிட்டு ஒழிஞ்சிகிச்சு
மேகத்துல நிலவு
மேலாடை தாவணி
சேலையாக ஆச்சிடா
மிட்டாய் கம்மர்கட்டு
ஆசை எல்லாம் போச்சுடா
ராத்திரி எல்லாருக்கும்
கோழிக்கறி விருந்து
ராவா தான் ஊத்திக்குடு
நாட்டு சரக்கு மருந்து
ராசாத்தி வந்துட்டா
முன்னால வந்து
ஆரத்தி எடுங்கடா
சொல்லாம இங்க
ஊருசனம் ஒன்னுப்படும்
பொண்ணுமேல கண்ணுப்படும்
மேளதாளம் பாடிவரும்
சின்ன பசங்க ஆடி வரும்
மொத்தத்துல திருஷ்டி படும்டா
சந்தனத்தை...
ஹே சந்தனத்தை...
சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
ஹேய் ஹேய் ஹேய்...
உடாத சந்தனத்தை... சந்தனத்தை...



Autor(en): Santhosh Narayanan, Gana Bala



Attention! Feel free to leave feedback.