Kamal Haasan - Andhi Mazhai Songtexte

Songtexte Andhi Mazhai - Kamal Haasan




அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
(தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்)
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை மேகம்)
பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோரம் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை மேகம்)



Autor(en): Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.