Yuvan Shankar Raja feat. Karthik & Reeta - Oru Naalaikkul Songtexte

Songtexte Oru Naalaikkul - Yuvan Shankar Raja , Karthik , Reeta




ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகிற பொழுது
தொடு வானத்தைத்
தொடுகிற உணற்வு
ஓ...
ஓஹோ
ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத்
தொடுகின்ற உணர்வு
ஓஹோ
ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்
எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும்
வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஓஹோ...
ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகிற பொழுது
தொடு வானத்தைத்
தொடுகிற உணற்வு
(இசை...)
நடை உடைகள்
பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட
வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா...
இல்லை கடவுளா...
புரியாமல்
திணறிப் போனேன்
யாரேனும் அழைத்தால்
ஒரு முறை தான்
நீ தானோ
என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்.
உன் அருகினில்.
உறங்காமல்
உறங்கிப் போவேன்
இது ஏதோ
புரியா உணர்வு
இதைப் புரிந்திட
முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை...
ஒரு எரிமலை...
விரல் கோர்த்து
ஒன்றாய் சிரிக்கும்...
ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகிற பொழுது
தொடு வானத்தைத்
தொடுகிற உணற்வு
ஓ...
ஓஹோ
(இசை...)
நதியாலே
பூக்கும் மரங்களுக்கு
நதி மீது
இருக்கும் காதலினை
நதி அறியுமா.
கொஞ்சம் புரியுமா.
கரையோட
கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண்
இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும்
விரும்பி விட்டால்
நீ பறக்கலாம்
உன்னை மறக்கலாம்
பிறக்காத
கனவுகள் பிறக்கும்
தன் வாசனை
பூ அறியாது
கண்ணாடிக்கு
கண் கிடையாது
அது புரியலாம்...
பின்பு தெரியலாம்...
அது வரையில்
நடப்பது நடக்கும்...



Autor(en): Yuvan Shankar Raja, N Muthu Kumar



Attention! Feel free to leave feedback.