Malaysia Vasudevan - Enakennada Sugavasi Na Songtexte

Songtexte Enakennada Sugavasi Na - Malaysia Vasudevan




எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல
எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல
எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
ஒழைக்க ஒழைச்சுப் பொழைக்க
யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல
ஒழைக்க ஒழைச்சுப் பொழைக்க
யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல
அண்ணாச்சி நாடு என்னாச்சு
ஒரு முன்னேத்தம் இன்னிவர வல்ல
அண்ணாச்சி நாடு என்னாச்சு
ஒரு முன்னேத்தம் இன்னிவர வல்ல
சோறு கண்ட எடம்தான் சொர்க்கம்
சூடு சொரணை இல்லா வர்க்கம்
நாட்டு நடப்ப சொன்னா வெட்கம்
மூடி மறைச்சு வச்சா துக்கம்
சொதந்திர தேசத்துல
எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
ஓட்டுப் போட கேட்டு
நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம்
ஓட்டுப் போட கேட்டு
நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம்
ஓட்ட நீயும் போட்ட
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்
ஓட்ட நானும் போட்டேன்
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்
நாம குடுத்துதான்டா பதவி
நமக்கு ஏதும் இல்ல உதவி
கெணத்துக்குள்ள இருக்கும் தவள
ஒனக்கும் எனக்கும் என்ன கவல
போடாங்ங்ங்ங்கங்ங்கங்க
எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
அறிவு பண்பு தெறம
மூணும் உள்ளவன வாழ விடமாட்டான்
அறிவு பண்பு தெறம
மூணும் உள்ளவன வாழ விடமாட்டான்
அண்ணா காந்தி நேரு
அப்ப சொன்னதெல்லாம்
இப்ப எவன் கேட்டான்
அண்ணா காந்தி நேரு
அப்ப சொன்னதெல்லாம்
இப்ப எவன் கேட்டான்
பயிர மேயுதிங்க வேலி
பட்டப் பாட்டுக்கில்ல கூலி
நெசத்தப் போல இருக்கு போலி
நேர்மைக்கென்ன இங்க ஜோலி
புண்ணிய பூமியிலே
எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல
எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்






Attention! Feel free to leave feedback.