Mano Chitra - Oru Myinna Myinna Kuruvi Songtexte

Songtexte Oru Myinna Myinna Kuruvi - K. S. Chithra , Mano




ஆ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
பெ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
ஆ: மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை
கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
பெ: அதை பாராட்டி பாட்டு எழுது
ஆ: பாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
போராடும் இந்த மனது
பெ: இது பொல்லாத காளை வயது
ஆ: சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து
இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து
பெ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
ஆ: அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
பெ: ஏதோ ஏதோ நேரம் வந்தால் காதோரம்
மெல்ல கூறி ஏராளம் அள்ளித் தருவேன்
ஆ: அது போதாமல் மீண்டும் வருவேன்
பெ: நான் தானே நீச்சல் கோலம்
நாள்தோறும் நீ வந்து ஓயாமால் நீச்சல் பழகு
ஆ: அடி தாங்காது உந்தன் அழகு
பெ: அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்
அன்பின் நேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்
ஆ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
பெ: மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
ஆ: மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
பெ: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
ஆ: அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
Tamil Lyrics at 10:12 AM



Autor(en): Ilaiyaraaja, Vaalee


Attention! Feel free to leave feedback.