Mano Swarnalatha - Andhiyila Vaanam (From "Chinnavar") Songtexte

Songtexte Andhiyila Vaanam (From "Chinnavar") - Mano Swarnalatha

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
ஓடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்
கட்டமர தோணி போல
கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்மேல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
வெள்ளியல தாளந்தட்ட
சொல்லியொரு மேளங்கோட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா
மல்லியப்பூ மாலை கட்ட
மாரியிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் என்று கூடும் இன்றல்லோ
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

Attention! Feel free to leave feedback.