P. Susheela feat. Raj Sitaraman - Manasukkul Songtexte

Songtexte Manasukkul - P. Susheela , Raj Sitaraman




மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழிக்கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடைக்கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா இதுதான் ஆலிங்கனம்
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்
கண்களில் காதலின் உன் நோட்டம் பார்த்த பின்
இதயம் உறுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இடந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றும் உன்னைக் கேட்டேன்
கண்மணி பூங்காவினில் காத்திருந்தேன்
கண்ணீர்த் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழி பெயர்த்தாய்



Autor(en): R Vairamuthu, V S Narasimhan



Attention! Feel free to leave feedback.