Unnikrashan - Mazhai Mazhai Songtexte

Songtexte Mazhai Mazhai - Unnikrashan




யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்நோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற பொற்காலம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றல் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா
தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
ஐயோ தீ நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்?



Autor(en): Vairamuthu


Attention! Feel free to leave feedback.