S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Maane Theney Songtexte

Songtexte Maane Theney - S. P. Balasubrahmanyam , S. Janaki




மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மன்மத ராசனின் மய்யலை தேடுது
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி
நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
ஆத்தோரம் ... காத்தாடுது
காத்தோடு ... பூவாடுது
பூவோடு ... தேன் பாயுது
தேனோட ... தேன் சேருது
அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா
... மானே தேனே ...
அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி
ஏ. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி
காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்
ஊரோரம் ... தோப்பானது
தோப்போரம் ... நீரானது
நீரோட ... நீர்சேருது
ஆனந்தம் ... தான் பாடுது
கன்னம் கண்களில் சொன்னது என்னடியோ... வா வா வா வா
... மானே தேனே...



Autor(en): Ilaiyaraaja, N Kamarajan


Attention! Feel free to leave feedback.
//}