S. P. Balasubrahmanyam - Kaadhal Enna Kannamooch Songtexte

Songtexte Kaadhal Enna Kannamooch - S. P. Balasubrahmanyam




காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா. ஓ. ஓ...
கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் ஒளி தான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா. ஓ.ஓ.
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா. .ஓ



Autor(en): pazhani barathi, s. a. rajkumar


Attention! Feel free to leave feedback.