S. P. Balasubrahmanyam - Sivamayaman Songtexte

Songtexte Sivamayaman - S. P. Balasubrahmanyam




ஐந்தான முகமெதிரில் அருள் பொழியுதே
அனலான மலை காண மனம் குளிருதே
சிவமயமாக தெரிகிறதே சிந்தையில்
சவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே சிந்தையில்
சவயோகம் வருகிறதே
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே
மணம் ஊறிடுதே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சவயோகம் வருகிறதே
சிந்தையில் சவயோகம் வருகிறதே
யுகம் நான்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா
யுகம் நான்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா
சத்தியம் நீ தான் சகலமும் நீ தான்
நித்தியம் எண்ணில்
நிலைப்பவன் நீ தான்
அருணாச்சலா உன்னை நாடினேன்
அருணாச்சலா உன்னை நாடினேன்
சிவ லீலை செய்யாமல்
சிரியேனை ஆட்கொள்ள
சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா!
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சவயோகம் வருகிறதே
முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உண்னை காண்கிறேன்
முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உண்னை காண்கிறேன்
தீ எண்ணும் லிங்கம்
ஜோதியில் தங்கும்
பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும்
அருணாச்சலா உன் கோலமே
அருணாச்சலா உன் கோலமே
மணம் காண வர வேண்டும்
தினம் தோறும் வரம் வேண்டும்
மலையான நாதனே அருள்வாய் அப்பா
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சவயோகம் வருகிறதே
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே
மணம் ஊறிடுதே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே



Autor(en): VAARASREE


Attention! Feel free to leave feedback.