S. P. Balasubrahmanyam - Vizhiyele Malarndadhu - From "Bhuvana Oru Kelvi Kuri" Songtexte

Songtexte Vizhiyele Malarndadhu - From "Bhuvana Oru Kelvi Kuri" - S. P. Balasubrahmanyam




விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே
(விழியிலே)
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி
(விழியிலே)
கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி
மோகவலை சூடும் நேரமே யோகம் வரப் பாடும் ராகமே
(விழியிலே)



Autor(en): ILAIYARAAJA, PANJU ARUNACHALAM


Attention! Feel free to leave feedback.