Shahul Hameed feat. Swarnalatha - Usilambatti Pen Kutti Muthu Songtexte

Songtexte Usilambatti Pen Kutti Muthu - Swarnalatha , Shahul Hameed




உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேண்டி
உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசு தடி
குதி போட்டு வந்தேண்டி
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா
அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா
மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொன்னு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும் அதுக்கும் காலம் வரும்
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
வெடலப் பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு
இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிப் பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அது தான் பெண்ணின் குணம்
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே




Shahul Hameed feat. Swarnalatha - Genteleman
Album Genteleman
Veröffentlichungsdatum
13-07-1993



Attention! Feel free to leave feedback.
//}