A. R. Rahman - Anjathey Jeeva (From "Jodi") Songtexte

Songtexte Anjathey Jeeva (From "Jodi") - Siva Sithambaram feat. Swarnalatha




அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே
பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
குளிர் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காற்று இல்லாத இடமும் அட
காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பினில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா



Autor(en): a. r. rahman



Attention! Feel free to leave feedback.