Udit Narayan, Sadhana Sargam - Pathinettu Vayasil Songtexte

Songtexte Pathinettu Vayasil - Udit Narayan , Sadhana Sargam




பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம்
தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும்
வாய்வைத்து வாயைமூட
வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும்
ஓ... ஓ...
ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
மார்கழிமாதத்தில் குளிர் அடித்தால்
கம்பளி போர்வையில் எது பிடிக்கும்
ஓ... மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால்
கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்
தண்ணீர் ஒரு பக்கம் உண்டு
வெந்நீர் ஒரு பக்கம் உண்டு
பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும்
ஹா... முத்தம் எனும் தீர்த்தம் கொண்ட ரத்தம் அது உரியும் வண்ணம்
நித்தம் நீராடவேண்டும் அது பிடிக்கும்
தித்திக்கும் உதட்டில் தீப்பிடிக்கும்
ஓ... ஓ...
ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தாயோடு தங்கையும் துணை இருக்க
யாரோடு தூங்கிட மிகப்பிடிக்கும்
தாயோடு தங்கையை துரத்திவிட்டு
தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் உண்டு
புயல் போல் ஒரு சீண்டல் உண்டு
ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி
புயல் போல் எனை சீண்டி சீண்டி
புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும்
பெண்ணுக்குள் பேர் இன்பம் வேர் பிடிக்கும்
ஓ... ஓ...
ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம்
தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும்
வாய்வைத்து வாயைமூட
வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும்
ஓ... ஓ...



Autor(en): Vairamuthu



Attention! Feel free to leave feedback.