Yazin Nizar feat. Janaki Iyer - Kadavul Ezhuthum (From Yaman) Songtexte

Songtexte Kadavul Ezhuthum (From Yaman) - Janaki Iyer , Yazin Nizar




கடவுள் எழுதும்
கவிதை நீயே
என் இதயம் முழுதும்
நிறைந்து விட்டாயே
உன்னாலே தூக்கங்கள்
தூள் தூளாய் போனதே
வேருக்குள் நீரைப்போல்
நம் காதல் ஏறுதே
கடவுள் எழுதும்
கவிதை நீயே
என் இதயம் முழுதும்
நிறைந்து விட்டாயே
காலை எல்லாமே
உன் அருகே எழாதோ
மாலை எல்லாமே
உன் மடியில் விழாதோ
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்
இறுதி வரைக்கும் இருக்கும்
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்
இமைகள் உன்னை அழைக்கும்
கடவுள் எழுதும்
கவிதை நீயே
என் இதயம் முழுதும்
நிறைந்து விட்டாயே
காயம் எல்லாமே
உள்ளாறும் உன்னாலே
நீயும் இல்லாமல்
உயிர் நீங்கும் தன்னாலே
மெதுவாய் மனதை திறந்தாய்
எனக்குள் கரைந்தாய் உயிரில் கலந்தாய்
உறவாய் எனக்கு கிடைத்தாய்
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்



Autor(en): Ko Sesha


Attention! Feel free to leave feedback.
//}