Yuvan Shankar Raja, Tanvi - Iragai Poley Songtexte

Songtexte Iragai Poley - Yuvan Shankar Raja feat. Tanvi




இறகை போலே
அலைகிறேனே
உந்தன் பேச்சை
கேட்கையிலே
குழந்தை போலே
தவழ்கிறேனே
உந்தன் பார்வை
தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
கூட வந்து நீ நிற்பதும்
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே
வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
ஏய் என்னானதோ
ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே
வானவில் போன்றதே
துரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்



Autor(en): susindhran, yuga bharathi, yuvan shankar raja



Attention! Feel free to leave feedback.