A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Sadhana Sargam - Manasukkul Oru Puyal Lyrics

Lyrics Manasukkul Oru Puyal - A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Sadhana Sargam




மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய்
அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன
என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன
என்னென்ன ஆகும்
மூச்சு விடவும் மறந்து விட்டேன்
மூச்சு விடவும் மறந்து விட்டேன்
எனக்கென்று பெயரில்லை அன்பே
என் உடலில்லை இங்கே
என் உயிரில்லை உயிரே
என்ன புதுமை அட தூக்கம் என் இடகண்ணில் கனா
என் வலகண்ணில் நிஜமா
மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்தி பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன் உன் பொன் மடி வாழ்க
நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன
என்னென்ன ஆகும்
மேற்கில் போன பறவை ஒன்று
மேற்கில் போன பறவை ஒன்று
மே மாதத்தில் எனக்கொரு கன்னி பெண் வருமென்று
காதில் பண் பாடி விட்டு சென்றது
என்ன வியப்பு அந்த பாடல் பண் தேய்யுமுன்னே
கண்ணே என் கண்கல் உன்னை கண்டது
பருவதிலே ஒரு முறை பூத்தேன்
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன்
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு குடிசை பொட்டு
நான் வாழ்ந்திட வேண்டும்
நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க



Writer(s): A R RAHMAN, ALLAHRAKKA RAHMAN, VAIRAMUTHU R, R VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.