A.R. Rahman feat. Kailash Kher, Sathya Prakash, Deepak & Pooja AV - Aalaporaan Thamizhan Lyrics

Lyrics Aalaporaan Thamizhan - A. R. Rahman feat. Kailash Kher, Sathya Prakash, Deepak & Pooja AV




ஊரு கண்ணு ஒரவ கண்ணு
உன்ன மொச்சு பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு
முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருகுன்னே வாழுகன்னு அப்பனுக்கும் சம்மதம்
எந்த எடம் வலிகன்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணு போல எங்களுக்கு காவலா நீ வரணும்
ஆளப்போரன் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
சொல்லி சொல்லி சரித்திரத்தில் பெயர் பொரிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்
மின்னும் உலக மேடை
தங்க தமிழ பாட
பச்சை தமிழ் உச்சி புகழ் ஏறி சிரிக்கும்
வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா சுளுக்கேடுப்போம்
தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிறேரும்
காத்தோட கலந்தாலும்
அது தான் உன் அடையலாம்
அன்ப கொட்டி எங்க மொழி
அடித்தளம் போட்டோம்
மகுடத்த தரிக்கிற
ழகரத்த சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதை பார்த்தோம்
உலகத்தின் முதல் மொழி உசுரென காத்தோம்
"நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும்" என்பானே
பார் இளைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிப்பானே
கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
தமிழினமே...
வீழாதே...
தமிழினமே...
நெடுந்தூரம் உன் இசை கேட்க்கும்
பிறை நீட்டி பௌர்ணமி ஆக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் எழையும் உன் நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசன சேர்க்கும்
முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருகுன்னே வாழுகன்னு அப்பனுக்கும் சம்மதம்
எந்த எடம் வலிகன்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணு போல எங்களுக்கு காவலா நீ வரணும்
ஆளப்போரன் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய தந்தானே
வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா சுளுக்கேடுப்போம்
தமிழாலே ஒன்னானோம்
மாறாது எந்நாளும்
தமிழாலே ஒன்னானோம்
மாறாது எந்நாளும்



Writer(s): A R Rahman, Vivek




Attention! Feel free to leave feedback.